அகரம் பற்றி..
July 20, 2013
அகரம் தொட்டு
ஆயுதம் வரையில்
இயலாதவன் கூட கல்வி
ஈட்ட முடியுமிங்கே,
உங்கள் கால்களில்
ஊன்றி நிற்க
எங்கள் கரங்களால்
ஏணி அமைகின்றோம்,
ஐக்கிய மாகுங்களிங்கே உங்கள்
ஒற்றைக்கைத் தட்டலுக்கு
ஓராயிரம் எதிரொலி தந்து
ஔவை அறிவை அடையச் செய்வோம்!